வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி.. தாயின் வாயில் மதுவை ஊற்றி காட்டுக்குள் நடந்த சொல்ல முடியாத அசிங்கம்
தருமபுரி மாவட்டம் கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுரேந்தர். அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்து இருக்கிறார். இதில் சுரேந்தர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு பவித்ராவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் சுரேந்தரும், பவித்தராவும் வீட்டை விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவித்ராவின் தந்தை உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் சுரேந்தரின் தாய், தந்தை உட்பட பலரை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து சுரேந்தரின் தாய் முருகம்மாளை கும்பல் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞரின் தாய் முருகம்மாளை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் கடத்திச் சென்ற கும்பல், அவரை இரவு முழுவதும் அடித்து சித்ரவதை செய்திருக்கின்றனர். தொடர்ந்து விடியற்காலையில் பெண்ணை நடு ரோட்டில் விட்டு அனைவரும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.தொடர்ந்து, விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் போலீசார், ஐந்து பேர் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...