இரவோடு இரவாக நடந்த மாற்றம் - குமுறும் ஆட்டோ ஓட்டுநர்கள்
பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் அருகே காலியாக இருந்த இடத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரவோடு இரவாக ஆட்டோக்கள் உள்ளே இருக்கும் நிலையிலேயே, அதனைச் சுற்றி பேரூராட்சி கம்பி வேலி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்டோக்கள் நிறுத்தம் இடம் ஒதுக்க கோரியும் கடந்த ஒரு வார காலமாக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பேரூராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story