தடம்புரண்ட ரயில்... இரவு பகலாக சரிசெய்யும் ஊழியர்கள்... சரியாக உணவு கூட வழங்காத அதிகாரிகள்
- சரக்கு ரயில் தடம் புரண்டதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சரிவர உணவு வழங்கப்படவில்லை என கூறி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் நேற்று நள்ளிரவு முதல் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- இந்த நிலையில் வேலை செய்பவர்களுக்காக மதிய உணவு ஹோட்டலில் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
- குறைந்த அளவிலேயே உணவுப் பொட்டலங்கள் வந்ததால் ஏராளமான ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story