கடலூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு..கலெக்டர் அதிரடி ஆய்வு | Collector | Cuddalore
கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டத்தில் 15 பேராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தனி வார்டை கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென ஆய்வு செய்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர்,
களப்பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனி வார்டு அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்
Next Story