அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

x

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆணையிட்டார். இருப்பினும், கடலில் தொடர்ந்து கழிவு நீர் கலந்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள பக்தர்கள், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர்கள் கோரியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்