திடீரென குறுக்கே வந்த மாடுகள்... சறுக்கி விழுந்த டெலிவரி பாய்... ஓடி வந்து தூக்கிய இளைஞர்

x

சென்னை ஆவடியில், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவடி சி.டி.எச் சாலையின் குறுக்கே எருமை மாடு சென்ற போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், பிரேக் பிடித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனிடையே, ஆவடி பேருந்து நிலையம், பூந்தமல்லி சாலை, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்