நண்பனை கட்டி அணைத்த நொடி.. தலை நொறுங்கி இளைஞர் மரணம் - இப்படியும் ஒரு கொடூர சாவா?
டெல்லி, கரோல் பாக் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் தலையில் ஏசி விழுந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிதேஷ் என்ற 18 வயது இளைஞர், தனது நண்பர் பிரன்ஸ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் அருகேயிருந்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக ஏசியின் பின்புற பகுதி ஒன்று கீழே விழுந்தது. இதில் ஜிதேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில், பிரின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Next Story