டெல்லியில் பழைய தமிழ்நாடு இல்லத்தை இடிக்க தமிழக அரசு முடிவு
டெல்லியில் புதிதாக கட்டப்பட உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை இடித்துவிட்டு, புதிதாக கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, வரும் 27-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். முன்னதாக, வரும் 26-ம் தேதி டெல்லி சாணக்கியபுரியில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடுஇல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளார்.
Next Story