ஒரே மாதத்தில் 3 முறை... டெல்லி பறந்த ஆளுநர்... காரணம் என்ன..? | RN Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. பிறகு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படவும் இல்லை... தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவும் இல்லை. ஆனால், அவரே ஆளுநராக நீடித்து வருகிறார். இந்த சூழலில், திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். இது இந்த மாதத்தில் அவரது 3 ஆவது டெல்லி பயணமாகும். கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையிலான கூட்டத்திற்கு சென்றார். 19 ஆம் தேதியும் டெல்லி சென்றிருந்தார். இப்போது 3 ஆவது முறையாக சென்றிருக்கும் அவர், ஆளுநர் பதவி நீடிப்பு காரணமாக சென்றாரா? அல்லது தனிப்பட்ட பயணமா...? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story