"X பதிவில் அவதூறு" .. அர்ஜுன் சம்பத்துக்கு சிக்கல் - போலீஸ் சம்மன்!
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், உறுதி செய்யப்படாத தகவல் பதிவிட்டது தொடர்பாக, இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார். மதுரை கருப்பாயூரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செக்கானூரணி சம்பவத்தில் அர்ஜுன் சம்பத், தவறான தகவலை பதிவிட்டது குறித்து விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பிய நிலையில்,
அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். காவல்துறை சார்பில் தனிப்பிரிவு உருவாக்கி, சமூக வலைதள பக்கங்களை முழுமையாக கண்காணித்து வருவதாகவும் சிவபிரசாத் குறிப்பிட்டார்.
Next Story