ஆழ் கடலில் புத்தகம் எழுதி; ஆழ் கடலிலேயே வெளியீடு - காதல் தந்த தன்னம்பிக்கை...அரங்கேறிய உலக சாதனை

x

ஆழ் கடலில் புத்தகம் எழுதி அதை ஆழ் கடலிலேயே வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்...ராணிப்பேட்டை திமிரி பகுதியைச் சேர்ந்த கவிஞர் க.மணி எழிலன், மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியரியர் ஆவார்... சமீபத்தில் நடந்த விபத்தில் தனது வலது காலை இழந்த எழிலன் தனது விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் பதிப்புலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்... காதலர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்த இவர், தனது காதல் திருமணத்தை புத்தகமாக எழுதி வெளியிட திட்டமிட்டார்... விபத்து ஏற்பட்ட போது தன் காதல் மனைவியால் தான் தற்போது உயிரோடு இருப்பதாகக் கதை எழுதிய அவர், கிழக்கு கடற்கரை சாலை சென்னை நீலாங்கரை கடற்பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்திற்கு ஸ்கூபா டைவிங் மூலம் சென்று ஒரு சினிமாவுக்கான கதைச்சுருக்கத்தை எழுதி வாட்ஸ் அப் மூலம் பதிப்பகத்திற்கு அனுப்பி அதை புத்தகம் ஆக்கி மீண்டும் ஆழ்கடலிலே வெளியிட்டுள்ளார்... இதுவரை ஸ்கூபா டைவிங்கிலும், பதிப்புலகிலும், எழுத்துலகிலும் இது போன்ற சாதனையை எவரும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது... எழிலனின் சாதனையை அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உறுதி செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்