வயிற்றில் உள்ள இறந்த குழந்தை..!மருத்துவர்களின் அலட்சியம் பதில்.. தாய்க்கு நேர்ந்த கொடூரம்

x

விழுப்புரத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இறந்து போன குழந்தையை அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையை சேர்ந்த தீபா, 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவித்துள்ள நிலையில், குழந்தையின் அசைவு இல்லை என கூறியுள்ளனர். ஆனால், தனியாரில் ஸ்கேன் செய்த போது, 2 நாட்களுக்கு முன்பே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் தீபா அனுமதிக்கப்பட்ட நிலையில், இறந்த குழந்தையை அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக கர்ப்பிணியின் கணவர் பார்த்தசாரதி குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்