110 கிலோ மீட்டர் அசுர வேக புயல் வீசும்... கரையை தொடும் போது ’டானா’-வின் உக்கிரம்

x

110 கிலோ மீட்டர் அசுர வேக புயல் வீசும்... கரையை தொடும் போது ’டானா’-வின் உக்கிரம்

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் டானா சூறாவளி புயல் காரணமாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில், கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு12 கிலோ மீட்டர் வேகத்தில் வட மற்றும் வடமேற்கு திசையில் டானா சூறாவளி புயல் நகர்ந்து வருகிறது. ஒடிசாவின் பாரதீப்பிற்கு தென்கிழக்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கு தெற்கே 310 கிலோ மீட்டர் தொலைவில்

உள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது வெள்ளியன்று அதிகாலையில், கடுமையான சூறாவளி புயலாக வலுப்பெற்று, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை, பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தமராக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது. இன்று இரவு முதல் நாளை காலை வரை மணிக்கு 100 முதல்110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்