5 வருடம் தியேட்டரில் நடந்த டகால்டி.. ஒரே நாளில் கிளைமாக்ஸ் நடத்திய போலீஸ் | Salem
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கின் பங்குதாரர் கீதா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்திருந்தார்... அதில் திரையரங்கில் பணியாற்றிய மேலாளர் கண்ணன் உள்பட சிலர் ஒன்றாக சேர்ந்து "ஹவுஸ்புல்" ஆகாத நாட்களில் ஏற்கனவே விற்பனையான டிக்கெட்டுகளை அதே எண்ணுடன் போலியாக மறு டிக்கெட்டுகளை அச்சரித்து விற்பனை செய்து, அந்தப் பணத்தை வரவு வைக்காமல் முறைகேடு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2019 முதல் இந்தாண்டு வரை 90 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேலாளர் கண்ணன், புக்கிங் ஆபரேட்டர்கள் வெங்கடாசலம், முருகன், ஏழுமலை ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...