அடுத்த ருத்ர தாண்டவத்துக்கு தயாரானது வங்கக்கடல்.. இந்த வாரமே தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்
அடுத்த ருத்ர தாண்டவத்துக்கு தயாரானது வங்கக்கடல்.. இந்த வாரமே தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்
தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் முதல் வாரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது இலங்கை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை தூத்துக்குடி கடல் பகுதியை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.