"எல்லாத்துக்கும் ஒரே password-ஆ..இந்த கும்பலிடம் மிக கவனமா இருங்க..." - அலர்ட் கொடுத்த சைபர் க்ரைம்
எல்லாத்துக்கும் ஒரே password-ஆ..இந்த கும்பலிடம் மிக கவனமா இருங்க..." - அலர்ட் கொடுத்த சைபர் க்ரைம்
சைபர் க்ரைம் மோசடி கும்பலின் எஸ்.பி.ஐ பரிசு புள்ளிகள் மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சைபர் க்ரை மோசடி கும்பல் நூதன முறையில், தனி நபரின் செல்போன்களை ஹேக் செய்வதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்பு, போலியான வாட்ஸ் அப் கணக்குகளை உருவாக்கி, பல்வேறு அதிகாரப்பூர்வ அமைப்புகள் போல், எஸ்.பி.ஐ பரிசு புள்ளிகள் தொடர்பான செய்திகள் அனுப்பி மோசடி செய்வதாகவும் அலெர்ட் செய்திருக்கின்றனர். கும்பல் அனுப்பும் செய்திகளின் லிங்க்குகளை தொடும் போது, அவர்களின் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோவதோடு, நெட்வொர்க்குகளில் இருந்து அவர்களின் மொபைல் எண் துண்டிக்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடந்த இரு மாதங்களில் 73 புகார்கள் பெற்றிருப்பதாக கூறும் போலீசார், இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். மேலும், தங்களின் சமூக வலைதள கணக்குகளுக்கு ஒரே கடவுச் சொல்லை பயன்படுத்தாமல், கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றம் செய்யுமாறும் எச்சரித்திருக்கும் சைபர் க்ரைம் போலீசார், இது போன்ற மோசடிகளில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.