நாடு விட்டு நாடு கடத்தப்படும் தமிழர்கள்.."மிக எச்சரிக்கை மக்களே" - அதிகாரி சொன்ன திடுக் தகவல்

x

சைபர் கிரைம் செய்வதற்காக, கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு சென்னை மண்டல குடிபெயர்வோர் பாதுகாப்பு பிரிவு கடிதம் எழுதியுள்ளது.வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் சென்னை மண்டல குடிபெயர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். சமூக வலைதளங்களில் கம்போடியா மியான்மர் போன்ற பல வெளிநாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் இருப்பதாக ஆசையை தூண்டும் வகையில் விளம்பரம் செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். வெளி நாடுகளுக்கு சென்றதும், பிட்காயின் மோசடி ஓடிபி மோசடி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதாகவும், இந்த வேலைகளை செய்யாத நபர்களை ரூமில் அடைத்து கொடுமை செய்யும் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டு கடத்தப்படுவதால், 202 மோசடி வலைத்தளங்களை முடக்க மெட்டா நிறுவனத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மோசடி குறித்து புகார் அளிக்கலாம் என்று அதிகாரி கேட்டுக் கொண்டார். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளோரை மத்திய அரசு மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்