மத்திய அரசின் கண்டிஷன்.. திடீர் கரண்ட் பில் உயர்வின் பின்னணி

x

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்துவதற்கான காரணம் என்ன என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.

2011-2012ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 954 கோடியாக இருந்த நிதி இழப்பு, 10 ஆண்டுகளில் 94 ஆயிரத்து 312 கோடி ரூபாய் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை, 1 லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

2011-2012ஆம் ஆண்டில் 43 ஆயிரத்து 493 கோடி ரூபாயாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து, 1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும்,

4 ஆயிரத்து 588 கோடி ரூபாயாக இருந்த கடன்கள் மீதான வட்டி, 259 சதவீதம் அதிகரித்து, 16 ஆயிரத்து 511 கோடி ரூபாயயாக உயர்ந்துள்ளதாகவும் விளக்கம் விவரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் நிதி இழப்பை இடு செய்ய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும்,

நுகர்வோர் சுமையை கருத்தில் கொண்டு, பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டுதோறும் சிறிய அளவில் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தி வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, மத்திய அரசின் நிதியை பெற, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனை என கூறப்பட்டுள்ளது.

அதன்படியே, சிறிய அளவில் கட்டணத்தை உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்