மகனின் கண்ணை தானம் செய்த பெற்றோர்..- ஹாஸ்பிடலில் கதறி அழுத சோகம்..
தலையில் ஈட்டி இறங்கி தனியார் பள்ளி மாணவர் மூளைச்சாவடைந்த விவகாரத்தில், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கிஷோர் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி பள்ளியின் விளையாட்டு திடலில் வட்டு எறிதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகே ஈட்டி எறிதல் பயிற்சியிலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், மாணவர் ஒருவர் எரிந்த ஈட்டி, கிஷோரின் தலையில் இறங்கியதில் படுகாயமடைந்த அவர் மூளைச்சாவடைந்தார். இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பெரும் துயரத்திற்கு இடையே மாணவரின் கண்களை தானம் வழங்குவதாக கிஷோரின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
Next Story