திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் திடீர் நிறுத்தம்...நடு இரவில் ரயிலை காப்பாற்றிய கேட் கீப்பர் -

x

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் திடீர் நிறுத்தம்

நடு இரவில் ரயிலை காப்பாற்றிய கேட் கீப்பர்

விசித்திர சத்தம்...கொஞ்சம் விட்டாலும் பேராபத்து

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், சென்னையில் இருந்து பயணிகளுடன் வந்த திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது...

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. இதனிடையே, ஏற்கனவே அவ்வழியாக மற்றொரு ரயில் சென்ற போது மாறுபட்ட சத்தத்தை கேட்ட கேட் கீப்பர், தண்டாவாளத்தை சோதனை செய்தார். இதில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்டவாளத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பின்னர் புறப்பட்டு வந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதேபோன்று, மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரயிலும் 10 கிலோமீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டது. இந்நிலையில், தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இன்று மதியம் வரை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால், குறிப்பிட்ட பகுதியை கடக்கும் ரயில்கள் அனைத்தும் 10 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்