மலேசியாவில் வேலைக்கு சென்ற கணவர் - மனைவிக்கு கடைசியாக வந்த போன் கால் ..

x

குடும்ப வறுமையை போக்க மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற நபர், திடீரென உயிரிழந்ததாக தகவல் வந்த நிலையில், அவரது உடலை பெற்று தரக்கோரி குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அல்லீயூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 10-ம் தேதி வரை குடும்பத்தினருடன் பாஸ்கர் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஸ்கரின் மனைவியை திடீரென தொடர்பு கொண்ட மலேசிய போலீசார், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளனர். பாஸ்கர் குறித்த தகவல் தெரியாததால் அலறி துடித்த அவரது குடும்பத்தினர், ஒன்றரை வயது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தனது கணவரின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறியவும், அவரது உடலை தாயகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்