அம்பேத்கர் சிலை மீது விபரீத முயற்சி.. சற்று நேரத்தில் பரபரப்பான கடலூர்

x

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை நோக்கி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குள்ளஞ்சாவடி அம்பலவாணன் பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை மீது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. ஆனால் பெட்ரோல் குண்டு சிலை மீது படாமல், ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், போலீசார் நால்வரையும் கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஊர் பிரச்சினை காரணமாக அவர்கள் குண்டு வீசியது தெரிய வந்தது. இந்நிலையில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் விசிக நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட நபர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தாமரைச் செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்