மனைவி வேலைக்கு போவதால் வெறி... ஸ்கூல் பஸ்ஸை சூறையாடிய போதை கணவன்... அதிர வைக்கும் காட்சி
ஆசிரியையான மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாமல் தகராறு செய்த கணவர், மனைவியை அழைத்துச் செல்ல வந்த தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஜா. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி அருள்செல்வி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அருள்செல்வி வேலைக்கு செல்வது பாலசுப்பிரமணியனுக்குப் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி பேருந்திற்காக அருள்செல்வி காத்திருந்த போது, மது போதையில்
அங்கு வந்த பாலசுப்பிரமணியன் ஆத்திரத்தில் பள்ளி பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கட்டையால் தாக்கி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது