முறைகேடாக பட்டா மாற்றம்? வட்டாச்சியர் அலுவலகத்தில் பெண்கள் செய்த சம்பவம்

x

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பெற்றோரின் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்ததாக, மண்டல துணை வட்டாட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்கள், போலீசார் மூலம் வெளியேற்றப்பட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஏ.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சேதுவுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். சேதுவும், அவரது மனைவியும் மரணமடைந்த நிலையில், அவர்களது பெயரில் இருந்த பல ஏக்கர் நிலங்களை, மகன் முருகவேல் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பட்டா மாற்றத்தை ரத்து செய்யக்கோரி முருகவேலின் சகோதரிகள் 3 பேரும் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்தனர். எனினும், நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த சகோதரிகள், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரை வரவழைத்து அந்த பெண்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்