இறந்தவரை பார்த்து அழுதவர்கள்.. அடுத்த நொடியே அலறியது ஏன்? சாவு வீட்டில் யாரும் எதிர்பாரா பயங்கரம்...

x

இறந்தவரை பார்த்து அழுதவர்கள்.. அடுத்த நொடியே அலறியது ஏன்? சாவு வீட்டில் யாரும் எதிர்பாரா பயங்கரம்... நரக வாசலை தொட்ட 12 பேர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, துக்க வீட்டிற்கு வந்தவர்கள், உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது மரணத்தின் விளிம்புக்கு சென்று உயிர் தப்பிய அபாய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஃப்ரீசர் பாக்ஸ் சவப்பெட்டியால், துக்க வீடுகளில் உயிர்பலிகள் ஏற்படும் விபரீதம் தொடர்கதையாகி வருகிறது...

இந்த வரிசையில் அரங்கேறிய சம்பவம் ஒன்றில், சுமார் 12 பேர்... நூலிழையில் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது..

பண்ருட்டி அடுத்துள்ள மேல்கவரப்பட்டு பகுதியில், லோகநாதன் என்ற விவசாயி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்...

இந்நிலையில், ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது..

தொடர்ந்து, லோகநாதனின் உடலுக்கு ஊராரும், உறவினர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில், அப்போதுதான் இந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது...

ஃப்ரீசர் பாக்ஸ் மீது மாலை அணிவித்து உறவினர்கள் அஞ்சலி செலுத்த, சிலர் பாக்ஸ் மேல் கை வைத்து அழுது கொண்டிருந்துள்ளனர்...

அப்போது, திடீரென ஃப்ரீசர் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டு, அதில் 12 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

12 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

ஃப்ரீசர் பாக்ஸ் மீது மாலையணிவித்து அஞ்சலி செலுத்தும் போது... பூக்களின் மீது இருக்கும் ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாக்சில் மின்கசிவு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது..

மேலும், பல இடங்களில் ஃப்ரீசல் பாக்ஸ்க்கான மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஃப்ரீசர் பாக்ஸை மக்கள் கவனத்துடன் கையாள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்