நகைக்கடையில் சித்தப்பாவை சரமாரியாக தாக்கிய மகன்..! வெளியான பகீர் CCTV காட்சி! | Cuddalore

x

கடலூரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு உரிமையாளரை மூர்க்கமாக தாக்கும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. லாரன்ஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையை சீனிவாசன் மற்றும் ரமேஷ் ஆகிய சகோதரர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சீனிவாசனின் மகன், ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கடைக்குள் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில் நேற்று கைகலப்பில் முடிந்துள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்