ஓடும் பஸ்ஸில் இளைஞர் செய்த சேட்டை - மன்னிப்பு கேட்க வைத்து சம்பவம் செய்த ஓட்டுனர்
கடலூரில், மதுபோதையில் தனியார் பேருந்தின் ஜன்னல் கம்பியை பிடித்தபடி பயணம் செய்த இளைஞரை பிடித்து பேருந்தின் ஓட்டுனர் மன்னிப்பு கேட்க வைத்தனர். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தின் ஜன்னல் கம்பியில் இளைஞர் பயணம் செய்த வீடியோ வைரலானதல், அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் ஆகிய இருவரையும் பேருந்தின் உரிமையாளர் சஸ்பெண்ட் செய்தார். இதையடுத்து, பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் அந்த இளைஞரை தேடிக் கண்டுபிடித்து, கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, மதுபோதையில் தவறு செய்து விட்டதாக கூறி, அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டார்...
Next Story