காதலித்ததை தட்டிக் கேட்டதால் கடும் கோபம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்
கடலூர் மஞ்சக்குப்பம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். எலைட் டாஸ்மாக் கடை விற்பனையாளரான இவர், கடந்த 20ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதுகுறித்து புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிசிடிவியை ஆய்வு செய்த போது, 2 சிறுவர்கள் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. அவர்களில் 17 வயது கல்லூரி மாணவனை பிடித்து விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்ததும், சிறுமியை மோகன் கண்டித்ததால், தனது 16 வயது நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி மாணவனையும், 16 வயது சிறுவனையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
Next Story