முதல் பயணத்திலேயே மாயமான கணவர்.. கலெக்டரிடம் மனு கொடுத்த மனைவி

x

ஓமன் நாட்டு கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், மாயமான கடலூரைச் சேர்ந்த நபரை மீட்டுத் தர வேண்டுமென, அவரது மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்...

இந்த விபத்தில் 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மாயமான நிலையில், நேற்றைய தினம் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்குள்ளான கப்பலில் கடலூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்பவர் பணியாற்றி வந்தார். மீட்கப்பட்டவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாததால், அவரை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி எழிலரசி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். காணாமல் போன தனஞ்செயன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் முதல் முறையாக கப்பலில் பொறியாளராக பணிக்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்