கடலூரில் வீட்டை சுற்றி வந்த கொள்ளை கும்பல்.. மும்பையில் இருந்து வந்த அலர்ட்

x

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழ்மணக்குடி கிராமத்தில் ரகு என்பவரது வீட்டை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டுள்ளனர்...

நோட்டமிட்ட கையோடு வீடு புகுந்து கொள்ளையடிக்கலாம் என எண்ணிய மர்ம நபர்கள், வீட்டின் பின் பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர்...ஆனால் அவர்களால் உடைக்க முடியவில்லை.

இதனால் எதிரே இருந்த சாமிநாதன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தது கொள்ளை கும்பல்...

வீட்டிற்குள் நுழைய கொள்ளை கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்க, அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் மும்பையில் இருந்தபடியே செல்போனில் பார்த்துள்ளார் சாமிநாதனின் உறவினரான சத்யா..

உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு தனது உறவினர்களுக்கு, கொள்ளை கும்பல் குறித்து அலர்ட் செய்துள்ளார்...

சுதாரித்துக் கொண்ட குடும்பத்தினர் வீட்டில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அலாரத்தை ஒலிக்க விட கொள்ளையர்கள் பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்...

இந்நிலையில் மொத்த கிராமம் அலர்ட் ஆன நிலையில், ஊரில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து கொள்ளையர்கள் வலம் வந்ததை கண்காணித்துள்ளனர்.

கிராமத்தினர் கண்காணிப்பில் இருந்ததை அறியாத கொள்ளையர்கள், காலையில் சாவகாசமாக அதே வழியாக நடந்து வர..அவர்களை அடையாளம் கண்ட மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பிடித்த கையோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், திருச்சியைச் சேர்ந்த மதியழகன், கம்மாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அன்பழகன் என தெரியவந்துள்ளது.

இந்த கும்பல், சிதம்பரம், அண்ணாமலைநகர், லால்புரம் உள்ளிட்ட பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து போலீசார் சுமார் 30 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றி, கொள்ளையர்களை சிறையில் அடைத்தனர்.

ஒரு சிசிடிவி காட்சியை வைத்து மொத்த கொள்ளை கும்பலையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர் கீழ்மணக்குடி


Next Story

மேலும் செய்திகள்