"மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம்"... உயிர் நண்பன் பேச்சை கேட்ட நபருக்கு உண்மையில் காத்திருந்த ஷாக்
கடலூர் நெய்வேலியைச் சேர்ந்த தொழிலாளி செந்தமிழ்ச் செல்வனும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்த நிலைஹில் ரமேஷ் மேற்கு வங்கத்திற்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளார்... திடீரென ஒருநாள் செந்தமிழ் செல்வனைத் தொடர்பு கொண்ட ரமேஷ் தான் மால்டா நாட்டில் 3 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், செந்தமிழ் செல்வனின் மகனுக்கு மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்... செந்தமிழ்ச் செல்வனைத் தெரிந்தவர்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்துள்ளார்... ரமேஷ் தலா ஒருவருக்கு 1 லட்ச ரூபாய் பணம் செலவாகும் என கேட்ட நிலையில், அந்தப் பணத்தை னது உறவினரான மைக்கேல் துசார் அம்ரித் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்... அதன்பேரில் செந்தமிழ் செல்வன் தனது நண்பர்கள் உறவினர்கள் என கிட்டத்தட்ட 10 பேரிடம் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார்... ஆனால் ரமேஷ் வேலை வாங்கித் தராத நிலையில், மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ரமேஷ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மேற்கு வங்கம் சென்று தேடுதல் வேட்டை நடத்தி புருலியா மாவட்டத்தில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...