பிரசவ நேரத்தில் வெளியே தள்ளிய மருத்துவமனை.. பணிக்குடம் உடைந்து ரத்ததோடு..நெய்வேலியை உலுக்கிய கொடூரம்

x

நெய்வேலி நகரத்தில் நாடோடியாக, ஏராளமானோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்களில், ஸ்ரீதர் என்பவரின் மனைவி மேரி நிறைமாத கர்ப்பிணியாக, வயிற்று வலியுடன் என்எல்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு பணி புரியும் ஊழியர்கள், மேரியை உள்ளே அனுமதிக்காமல் மருத்துவர் இல்லை எனக்கூறி வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வெளியே சென்ற போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனை வரண்டாவில் கீழே விழுந்துள்ளார். அவருக்கு பணிக்குடம் உடைந்து ரத்த வெள்ளத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதைப்பார்த்து சிலர் கூச்சலிட்ட‌தும், குழந்தையையும், தாயையும் தூக்கிச் சென்று செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். அதே நேரத்தில், குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில், பணம் செலுத்தாத‌தால், மேரியை மருத்துவமனையில் இருந்து வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது. அழுதுக்கொண்டே பச்சிளம் குழந்தையுடன் மேரி வெளியே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்