சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... ஒரே அடியில் உடைந்த மண்டை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜன், உமாககேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், 16 வயது சிறுவனும் உள்ளனர். இந்த நிலையில் சிறுவனுக்கும், அப்பகுதியை சேர்ந்த தர்மராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜா, தனது குடும்பத்துடன் சென்று சிறுவனையும், அவனது தாயாரையும் தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தர்மராஜா, அவரது தந்தை முருகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது தாக்குதல் நடத்தும் அந்த வீடியோ காட்சிகள் வலைதள பக்கங்களில் வேகமாக பரவிவருகின்றது.
Next Story