ஏரியில் சடலமாக மிதந்த சிறுவன் - கடைசியாக கிஷோர் நடந்து சென்ற சிசிடிவி காட்சி..

x

கடலூர் அருகே, மாயமான 9 வயது சிறுவன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் - பொற்களை தம்பதியின் 9 வயது மகன் கிஷோர். தந்தை இறந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த கிஷோர், பாலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டிற்கு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள, இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், பக்கத்து ஊரான ஏழுமேடு ஏரி பகுதியில் நீரில் மிதந்தபடி சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், சிறுவன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்