Crowdstrike-க்காக மொத்த அடியையும் வாங்கும் மைக்ரோசாப்ட்

x

`அவன் தான்டா பெரிய வேலையா பாத்துட்டு போய்ட்டான்'' - Crowdstrike-க்காக மொத்த அடியையும் வாங்கும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம், சுமார் 18 மணி நேரத்தை கடந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் கணினி பயன்பாடு ஸ்தம்பித்து போயுள்ளது...

இதனால் விண்டோஸை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கணினி திரையில் blue screen of death என்ற error தோன்றியது. இதன் தாக்கம் விமான நிறுவனங்கள், ஐடி துறை, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை, மருத்துவ சேவை, வங்கிகள், ஊடகங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் உள்ளிட்டவறை பெருமளவு பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மைக்ரோசாஃப்டின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால், மைக்ரோசாஃப்டின் மென்பொருளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, Crowdstrike நிறுவன தலைவர் ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்க அளித்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்