மழையால் விடுதலையான குற்றவாளிகள்.. போலீஸ் சொன்ன பதிலால் அதிர்ந்துபோன நீதிபதி

x

மழையால் விடுதலையான குற்றவாளிகள்.. போலீஸ் சொன்ன பதிலால் அதிர்ந்துபோன நீதிபதி

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மழையில் சேதமடைந்து விட்டதாக காவல்துறை தெரிவித்ததையடுத்து, இருவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

சென்னையில் கடந்த, 2007ம் ஆண்டு மூன்றரை கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாக, முத்து, ராஜு ஆகியோரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவில், நீதிமன்றம் மற்றும் ஆய்வுக்கூட பகுப்பாய்வுக்கு எடுத்த மாதிரிகள் போக, மீதமுள்ள கஞ்சா, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது, 2015ல் ஏற்பட்ட பெருமழையில், அந்த கஞ்சா சேதமடைந்து விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், பறிமுதல் செய்த கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்றும்,

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, முத்து, ராஜு ஆகிய இருவரையும் விடுதலை செய்தது.


Next Story

மேலும் செய்திகள்