கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்று....மகளை கட்டித் தூக்கிய கொடூர மிருகம்...

x

வெங்கட்ராஜ் என்ற இளைஞர் அரங்கேற்றிய இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு விவசாயி முனிராஜின் மகளை கடத்தி பலாத்காரம் செய்ததாக வெங்கட்ராஜ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் முனிராஜின் மகளை சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து முனிராஜ் கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ், அவரை கட்டையால் தாக்கியதில், நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முனிராஜ் உயிரிழந்தார். மேலும் முனிராஜின் மகளையும் வெங்கட்ராஜ் கடத்திச் சென்றதால், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தெரியவரவே, வெங்கட்ராஜை கைது செய்த போலீசார், உடனிருந்த முனிராஜின் மகளையும் மீட்டனர். தொடர்ந்து கெலமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்