2வது ஒருநாள் போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி
2வது ஒருநாள் போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சோஃபி டெவைன் 79 ரன்களும் சுஸி பேட்ஸ் 58 ரன்களும் அடித்தனர். தொடர்ந்து 260 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி 100 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பெரிதாக பார்ட்னர்ஷிப் அமையாததால் 183 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1க்கு 1 கணக்கில் சமன் செய்தது.
Next Story