தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் பட்டாசு? - தமிழக அரசை கேள்வியால் விளாசிய கோர்ட்

x

தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த 2019ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கானது, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்வரும் தீபாவளி பண்டியை ஒட்டி, பட்டாசுகள் தயாரிப்பில் இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் இல்லை என்பதை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அரசிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க, கால அவகாசம் வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையானது, அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்