"எங்க கூட அனுப்பிவிடுங்க" - கட்சி வழக்கறிஞர் காலில் விழுந்து கதறும் காதல் மணம்புரிந்த பெண்ணின் தாய்
"பொண்ண எங்க கூட அனுப்பிவிடுங்க" - CPM கட்சி வழக்கறிஞர் காலில் விழுந்து கதறும் காதல் மணம்புரிந்த பெண்ணின் தாய்
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், தங்களது பெண்ணை தங்களுடன் அனுப்பி வைத்துவிடுமாறு, பெண் வீட்டார் கதறி அழும் காட்சி வெளியாகியுள்ளது.
நெல்லையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து, கடந்த 13ம் தேதி, ஒரு காதல் ஜோடி, சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டது. இதனையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புகுந்த பெண் வீட்டார், தங்களது பெண்ணை, தங்களுடன் அனுப்பி வைத்துவிடுமாறு கெஞ்சினர். பெண்ணின் அண்ணன் மற்றும் தாயார், அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பெண் வழக்கறிஞரின் காலில் விழுந்து, கதறி அழுதனர். இந்த காட்சி தற்போது, வெளியாகியுள்ளது. மேலும், பெண்வீட்டார் சாலையில் படுத்து போராட்டம் நடத்தியது, கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆகிய வீடியோக்களும் வெளியாகியுள்ளது.
Uploaded On 16.06.2024