கோவையிலிருந்து சென்ற சீக்ரெட் Code.. பரபரப்பான கரூர் பஸ் ஸ்டாண்ட்.. பின்னணியில் பகீர்
கோவையில் இருந்து கரூருக்கு, துருப்பிடித்த கைத்துப்பாக்கியை எடுத்து சென்ற நபரும், அவருக்கு உதவிய நபர்களும் பிடிபட்டனர்.
ரகசிய தகவலின்பேரில், கரூர் பேருந்து நிலையத்தில் வைத்து, சஞ்சய்குமார் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் துருப்பிடித்த நிலையிலான பயன்படுத்த முடியாத ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த கரூர் போலீசார், கோவை செல்வபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் சஞ்சய்குமார் தனது நண்பன், காஜா உசேன் என்பவரது கைத்துப்பாக்கியை எடுத்து வந்தது தெரியவந்தது. மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்த வழக்கில், காஜா உசேன் தற்போது சிறையில் உள்ளதும் தெரியவந்தது. இந்த வழக்கில் சஞ்சய்குமார் உட்பட நான்குபேரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Next Story