"கோவேக்ஸின் போட்டவர்களுக்கு.." ICMR சொன்ன முக்கிய தகவல் | Thanthitv

x

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியான கோவேக்ஸின் பற்றி, பனாரஸ் இந்து பல்கலைகழகம் ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கோவேக்ஸின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு பல்வேறு வகையான எதிர்மறை விளைவு ஏற்பட்டதாக இந்த ஆய்வறிக்கை கூறியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்த ஆய்வு பிழையானது என்று கூறியுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களிடம் ஆய்வு நடத்தி, இத்தகைய பக்க விளைவு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளது. இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் தொலைபேசி மூலம் கேள்வி கேட்டு, ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாதது தவறான அணுகுமுறை என்று கூறியுள்ளது. பக்க விளைவுகள் பற்றிய வரைமுறைகள், உலகளாவிய


Next Story

மேலும் செய்திகள்