பழைய குற்றால அருவியை கைமாற்றும் முடிவு.. திரண்ட கட்சி நிர்வாகிகள்.. பரபரத்த கலெக்டர் ஆபிஸ்

x

பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட கோரி அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி நாளை (ஆகஸ்ட் 29) அதிகாரப்பூர்வமாக வனத்துறை இடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில்

ஏற்கனவே பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் குரல் கொடுத்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் மனு அளிக்க திரண்டனர்

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனர் முதலில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி நிலையில் தாங்கள் காத்திருந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து செல்வதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து சென்றனர்.

இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்