ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி - சுற்றுலா பயணிகளுக்கு தடை
மேற்குதொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிக்கிறது. இதனால் பிரதான அருவி பகுதி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. ஐந்துருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Next Story