தமிழகத்திற்கே பேரிடியான சேதி..மொத்த குற்றாலமும் திக்.. திக்..மனம் மாற வைத்த ஒரு உயிர் பலி
வனத்துறை வசம் செல்கிறதா பழைய குற்றாலம் ?... இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்திருக்கும் பதில் குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...தென் தமிழகத்தின் பிரதான மற்றும் பிரபல சுற்றுலா தளங்களாக திகழ்கிறது, தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குற்றால அருவிகள்...கடந்த சில மாதங்களுக்கு முன், பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிறுவன் ஒருவன் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்...இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, பழைய குற்றால அருவி வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது...
தொடர்ந்து, வனத்துறை இடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது...
இதற்கு அனைத்து கட்சிகளின் சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது...இந்நிலையில்தான், பூலித்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு... நெற்கட்டும் சேவல் கிராமத்திற்கு வந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம்... மதிமுக துணைப் பொதுச் செயலாளரான வழக்கறிஞர் திமு.ராஜேந்திரனிடம் மனு ஒன்றை அளித்தார்..
அதில், பழைய குற்றால அருவி வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், பழைய குற்றால அருவி... பொதுப் பணித்துறையிடமே பழைய குற்றால அருவி இருக்கும் எனவும் வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்திருக்கிறார்...