குற்றாலத்தில் மக்களை நடுங்க வைத்த 12 அடி மலைப்பாம்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கார் நிறுத்தும் பகுதியில், மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்ட 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.
Next Story