அதிர வைத்த விபத்து... தட்டி கேட்ட பெண் போலீசை காது கூச வசை பாடிய நபர்... தரமான பாடம் புகட்டிய கோர்ட்

x

சென்னை அருகே, சாலையில் தவறான பாதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு போக்குவரத்தை சீர்செய்யும் நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கெணியை சேர்ந்த விவேக், கடந்த 4-ஆம் தேதி வெட்டுவாங்கேணி சந்திப்பில் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் சென்று, மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

அப்போது, அங்கு வந்த போக்குவரத்து காவலர் பிரியாவை விவேக் ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, போக்குவரத்து காவலர் பிரியா, நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விவேக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடைய ஜாமின் மனுவை விசாரித்த சோழிங்கநல்லூர் நீதிமன்றம், அவர் ஒரு வாரத்திற்கு வெட்டுவாங்கேணி சிக்னலில், காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து சீர்படுத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி, விவேக் வெட்டுவாங்கேனி சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்