பற்களை பிடுங்கிய விவகாரம்... சிசிடிவி காட்சிகள்... நீதிமன்றம் அதிரடி
விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும் என அருண்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது, சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க முடியாது என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
Next Story