நிதிநிறுவன இயக்குநர் செய்த மெகா மோசடி - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

நிதிநிறுவன இயக்குநர் செய்த மெகா மோசடி - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவை, காந்திபுரம் பகுதியில் இயங்கி வந்த முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற தனியார் நிதி நிறுவனம் மீது, அதன் வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகாரளித்தனர். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணம் மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றை திருப்பி செலுத்தவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது புகாரளிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், நிறுவனத்தின் இயக்குநர் குறிஞ்சி என்கிற குறிஞ்சி நாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் விசாரணையில், 15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை வாடிக்கையாளர்களிடமிருந்து ஏமாற்றியது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, குறிஞ்சி நாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்