ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் அதிரடி ஆர்டர் போட்ட நீதிமன்றம்

x

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகையை முறைப்படுத்த ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

வன பாதுகாப்பு தொடர்பாக, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களை அனுமதிப்பதால் , உள்ளூர் மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு கூட வெளியே வர முடியவில்லை என்றும், சுற்றுலா பயணிகள் வருகையை முறைப்படுத்த ஆன்லைன் பதிவுமுறையை அமல்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். மேலும், ஊட்டி சாலை விரிவாக்க பணி தொடர்பாக பெறப்பட்ட ஒப்புதல்களை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்